தேசிய செய்திகள்

ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது மகள் ஆராத்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது மகள் ஆராத்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மும்பை,

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11 அன்று கொரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா ராய் - ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆனால், சில தினங்களுக்கு பிறகு அதாவது கடந்த 17 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததால் ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனினும், அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்