தேசிய செய்திகள்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

6 மாதங்களுக்கு முன்பு பாராமதி நகராட்சி கவுன்சிலில் மிக பழைய ஆம்புலன்ஸ் உள்ளது என செய்திகள் வெளிவந்தன.

புனே,

மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக துணை முதல்-மந்திரி அஜித் பவார், சிறிய ரக சார்ட்டர்டு விமானத்தில் நேற்று காலை புறப்பட்டு சென்றார். விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் காலை 8.48 மணியளவில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது.

இதில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி, அஜித் பவார் மற்றும் அவருடன் ஒன்றாக பயணித்த பாதுகாப்பு அதிகாரி, 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேரும் பலியானார்கள். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. அதனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நசீம் காஜி ஓட்டி சென்றார். அவர் கூறும்போது, 6 மாதங்களுக்கு முன்பு பாராமதி நகராட்சி கவுன்சிலில் மிக பழைய ஆம்புலன்ஸ் உள்ளது என செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி அறிந்ததும், உடனடியாக அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்க அஜித் பவார் உதவினார்.

துரதிர்ஷ்டவசத்தில், அந்த புது ஆம்புலன்சிலேயே அவருடைய உடலை ஏற்றி, ஓட்டி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என வருத்தத்துடன் கூறினார். அவருடைய உடல் பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்தான் கல்லூரி திடலில் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...