தேசிய செய்திகள்

இந்தியா தனது இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: மோகன் பகவத்

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

ஹரித்வார்,

ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என தத்துவ ஞானி அரவிந்தர் கூறியுள்ளார்.

இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர் கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியா குறித்து சுவாமி ரவிந்திர புரி கூறியதில் முழு நம்பிக்கை உள்ளது. அவர் கூறியது போல் நிச்சயம் நடக்கும். அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்.

நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைய 20 - 25 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், நாம் ஒருங்கிணைந்து பணியாற்றினால், தற்போதைய வேகத்தை கூட்டினால், இலக்கை அடைவதற்கான நேரம் பாதியாகக் குறையும். நல்லது செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கீதையில், கடவுள் கிருஷ்ணர் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பொல்லாங்கு செய்பவர்கள் அழிக்க வேண்டும் என்பதை நாம் மறக்கக்கூடாது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களையும் இந்தியா வரவேற்றுள்ளது. இந்தியா தனது இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி செய்பவர்கள் விலகி செல்ல வேண்டும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்