தேசிய செய்திகள்

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தொலைபேசி வழியே அகிலேஷுடன் பேச்சு

உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷை டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு அரசியல் நிலவரம் பற்றி பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்து கணிப்புகளில் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டீரிய லோக் தள கட்சி தலைவர்கள் நேற்று லக்னோவில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் அரசியல் கூட்டணி பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷை, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு அரசியல் நிலவரம் பற்றி பேசினார். இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சஞ்சய் சிங் லக்னோ நகரில் அகிலேஷை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இதுபற்றி சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோ நகரில் சந்தித்து பேசினேன். அரசியல் களம் பற்றி டெல்லி முதல் மந்திரியும் தொலைபேசியில் அகிலேஷை தொடர்பு கொண்டு பேசினார் என தெரிவித்து உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்