தேசிய செய்திகள்

லக்னோ விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற தன்னை, லக்னோ விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தனது டுவிட்டரில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அகிலேஷ் யாதவ், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழாவைக்கண்டு அரசு அச்சப்படுகிறது.

இதன் காரணமாகவே, என்னை அலகாபாத் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். விமான நிலையத்திற்குள் காவல்துறை அதிகாரிகளுடன் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்களையும் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை