தேசிய செய்திகள்

பொய் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை: அகிலேஷ் யாதவ் மீது அமித்ஷா பாய்ச்சல்

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நாட்டிலேயே நம்பர் 1 மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும் எனவும் அமித்ஷா பேசினார்.

லக்னோ,

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாடி கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் கடும் சவால் அளித்து வருகிறது. உத்தர பிரதேச தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, அகிலேஷ் யாதவை கடுமையாக சாடினார். அமித்ஷா கூறுகையில், பொய் கூறுவதற்கு அகிலேஷ் யாதவ் வெட்கப்படவில்லை. உண்மை என நம்புவார்கள் எனக்கருதி பொய்களை அகிலேஷ் யாதவ் உரத்த குரலில் பேசுகிறார். உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அகிலேஷ் சொல்கிறார்.

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் 70 சதவீதம் வரை குறைந்துள்ளன. அகிலேஷ் யாதவ் ஆட்சி காலத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற குற்ற செயல்களின் புள்ளி விவரத்தை அளிக்க முடியுமா? என நான் அவருக்கு சவால் விடுக்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சி சாதி குறித்து பேசுகிறது. காங்கிரஸ் கட்சி குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறது. அகிலேஷ் யாதவ் மாஃபியாக்கள் மற்றும் குண்டர்களின் ஆட்சி குறித்து பேசுகிறார். பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. வளர்ச்சி குறித்து மட்டுமே பாஜக பேசி வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும் என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு