லக்னோ,
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேச ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும் போது சர்தார் வல்லபாய் டேல், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே சிந்தனையுடைய தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே மூவரும் பாடுபட்டனர் எனத் தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்த நிலையில், அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சித்துள்ள உத்தர பிரதேச மந்திரி ஆனந்த் ஸ்வருப் சுக்லா, முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறக்கூடும் என்றார். ஆனந்த் ஸ்வரூப் சுக்லா இது குறித்து மேலும் கூறுகையில்,
இஸ்லாமிய உலகத்துக்கு சவால் விடுப்பவராக யோகி ஆதித்யநாத் உள்ளார். ஆனால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்.ஐயிடம் இருந்து அனைத்து ஆதரவையும் பெற்று வருகிறார். ஐ.எஸ்.ஐ அமைப்பிடம் இருந்து பொருளாதார உதவியைக் கூட அகிலேஷ் யாதவ் பெற வாய்ப்பு உள்ளது. முஸ்லீம்களை திருப்திப்படுத்த அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறக்கூடும் என்றார்.