தேசிய செய்திகள்

டெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா, டாக்சி ஓட்டுநர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி: கெஜ்ரிவால்

டெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார இழப்பை சநதித்துள்ள ஆட்டோ ரிக்ஷா மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு ரூ 5 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த தொழிலாளர்களுக்கு சிறிய உதவியாக இந்தத் தொகை இருக்கும் எனவும் கெஜ்ரிவால் தனது அறிவிப்பின் போது கூறினார்.

அதேபோல், அடுத்த இரு மாதங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் இலவசமாக பொருள்கள் வழங்கப்படும் என்றார். டெல்லியில் அடுத்த வாரம் திங்கள் கிழமை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?