புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களிடம் இன்று பேசும்போது, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தொடர்பில்லாத விசயங்களை நேற்று பேசினார். எல்.பி.ஜி. மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இது தொடக்கம்தான் என்றார்.
நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், என்னால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது. ஏனென்றால், கேரளாவில் நாளை எனக்கு ஒரு நிகழ்ச்சி உள்ளது. அனைத்து கட்சி கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால், கட்டமைப்பு அளவில் பெரிய தவறு நிகழ்ந்திருக்கிறது. அதனை சரி செய்ய முடியாது. அதுவும் பிரதமரால் முடியாது என கூறியுள்ளார்.
நிலைமை கொரோனா காலகட்டம் போன்று உள்ளது என அவர் கூறுகிறார். ஆனால் கொரோனா காலத்தில் என்னென்ன சோகம் நடந்தது என்பதெல்லாம் அவருக்கு மறந்து விட்டது. அமெரிக்காவும், இஸ்ரேலும் என்ன கூறுமோ அதனை பிரதமர் மோடி செய்வார். ஆனால், விவசாயிகள் மற்றும் நாட்டு நலனுக்கான வேலைகளை செய்ய மாட்டார் என்றார்.