தேசிய செய்திகள்

அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க தயார் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி

அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில், டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடரை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்லும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 26 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், பொருளாதார வீழ்ச்சி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, அனைத்து விஷயங்களையும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்