தேசிய செய்திகள்

1% பேர் சிகிச்சை பெற்றாலும் அது பெரிய எண்ணிக்கையே; டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை

ஒரு சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அது பெரிய எண்ணிக்கையாகவே இருக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் மருத்துவரான சரத் சந்திரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில் முக கவசம் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை தீவிரமுடன் நாம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஒரு சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அது பெரிய எண்ணிக்கையாகவே இருக்கும் என எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.

அதனால், லேசான பாதிப்பு என நினைத்து விட கூடாது. நம்முடைய சுகாதார பணியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும். நமது பாதுகாவலர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பது நம்முடைய பொறுப்பு ஆகும். நமது மருத்துவர்கள் பாதிக்கப்பட்டால் அதனை நாம் தாங்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை