தேசிய செய்திகள்

தேர்தல் பிரசாரத்திற்காக பீகார் செல்கிறேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரி சதீஸ் ஜார்கிகோளி டெல்லி சென்றுள்ளார். எங்களுக்கு காங்கிரஸ் கட்சி கோவிலை போன்றது. அது எங்களுக்கு தலைமை அலுவலகம். அங்கு கட்சியினர் யார் வேண்டுமானாலும் செல்லலாம். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். சிலருக்கு தேர்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் சிலர் டெல்லி சென்றுள்ளனர். இதை வேண்டாம் என்று கூற முடியுமா?.

தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 5, 6-ந் தேதி பீகாருக்கு செல்கிறேன். காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. எனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதனால் நான் டெல்லி செல்கிறேன். நாங்கள் டெல்லி சென்றால் அரசியலுக்காக தான் செல்கிறோம் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு