தேசிய செய்திகள்

வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி: அமரீந்தர் சிங் அறிவிப்பு

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், பஞ்சாப் லோக் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து கட்சியில் நவ்ஜோத் சிங் சித்துவை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதையடுத்து, அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கினார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமரீந்தர் சிங் புது கட்சியை தொடங்கியது கடும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

இந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவுடன் தனது லோக் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமரிந்தர் சிங் கூறுகையில், எங்கள் (பாஜகவுடன்) கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து மட்டுமே பேச வேண்டியுள்ளது. 101 சதவீதம் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து