தேசிய செய்திகள்

நவிமும்பையில் அம்பேத்கர் நினைவிடம் டிசம்பர் 6-ந் தேதிக்குள் தயாராகும் - மந்திரி ஏக்நாத் ஷிண்டே தகவல்

நவிமும்பையில் அம்பேத்கர் நினைவிடம் வருகின்ற டிசம்பர் 6-ந் தேதிக்குள் தயாராகும் என மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தானே,

நவிமும்பையில் உள்ள ஐரோலி பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் மும்பை மாநகராட்சி கமிஷனர் அபுஜித் பங்கர் ஆகியோர் நினைவிட பணி நடக்கும் இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர் கூறுகையில், அம்பேத்கருக்காக நினைவிடம் அமைக்கும் பணிகள் முடிந்து வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதிக்குள் நினைவிடம் தயாராகி விடும். மேலும் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும், சட்ட வல்லுனருமான அம்பேத்கரின் நினைவுநாள், மகாபரிநிர்வான் திவாஸ் என்று அனுசரிக்கப்படும் என்றார்.

இந்த நினைவிடத்தில் நிகழ்ச்சி அரங்குகள், நூலகம், புகைப்பட தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்று இருக்கும் என நவிமும்பை மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை