தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு ; பதற்றம்

உத்திரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

கான்பூர்,

உத்திரபிரதேசம் கான்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ராணிப்பூர் சாலையை வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிலர் செங்கற்களால் தாக்கியதில் சிலையின் கை மற்றும் முகம் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, போலீஸ் சூப்பிரண்டு சுஷில் குலே கூறும் போது

சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலையைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு