தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் ஆம்புலன்ஸ் சேவை - மந்திரி சுதாகர் தகவல்

ஆம்புலன்ஸ் சேவையில் புதிய தொழில் நுட்பத்தை சேர்க்க கர்நாடக அரசு அனுமதி வழங்கி இருப்பதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

கர்நாடகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் சேவையில் புதிய தொழில் நுட்பத்தை சேர்க்க கர்நாடக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. மக்களின் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் புதிய தொழில் நுட்பத்தை சேர்ப்பதன் மூலம், அவற்றின் பயன்பாடும், தேவையும் எளிதில் பூர்த்தி அடையும்.

மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஆம்புலன்ஸ் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்க, கால் சென்டர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கால் சென்டர் ஊழியர்கள், ஒவ்வொரு ஆம்புலன்சும் எங்கு இருக்கிறது, அதன் டிரைவர் யார் என்பது உள்பட பல தகவல்களை அறிந்தது வைத்திருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்