தேசிய செய்திகள்

“அமேதி தொதி 70 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளது” - ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தின் அமேதி தொதி 70 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

மத்திய மகளி மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சா ஸ்மிரிதி இரானி, கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதிக்கான எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமேதி தொகுதியின் எம்.பி.க்களாக இருந்தனா.

இந்த நிலையில் தற்போது அமேதி தொகுதி பல காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். அமேதியில் உள்ள ஜகதீஷ்பூ பகுதியில் செயல்படும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், ஸ்மிரிதி இரானி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு வசதிகள் வழங்கப்படாமல் அமேதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்கூட இல்லாத சூழல் நிலவியது. தற்போது 7 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் அமேதி தற்சாபடைந்துள்ளது என்று தெரிவித்தா.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்