தேசிய செய்திகள்

இன்று அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

அதிமுக அணிகள் இன்று இணைக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அவசரமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புகிறார்.

சென்னை,

அதிமுகவில் பிளவு பட்டுள்ள இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அவசரமாக சென்னை வருகிறார். மும்பையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று சென்னை வருகிறார்.

அதிமுக அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்க கூடும் எனவும், துணை முதல் அமைச்சராக ஓ பன்னீர் செல்வமும் அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவி ஏற்க கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்