கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

எல்லை மீறும் மந்திரிகளின் பதவி ரத்து: கேரள கவர்னர் எச்சரிக்கை

எல்லை மீறும் மந்திரிகளின் பதவி ரத்து செய்யப்படும் என்று கேரள கவர்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கவர்னர் பதவியை களங்கப்படுத்தும் விதமாக மந்திரிகள் யாராவது பேசினாலோ, அறிக்கை வெளியிட்டாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

முதல்-மந்திரிக்கும், மந்திரிசபைக்கும் ஆலோசனை வழங்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் கவர்னர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான அறிக்கைகளை வெளியிடவோ, கருத்துகளை தெரிவிக்கவோ உரிமை இல்லை. எல்லை மீறும் மந்திரிகளின் பதவிகள் ரத்து உள்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதில் அவர் கூறி உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து