தேசிய செய்திகள்

எச்.ஏ.எல் நிறுவன ஊழியர்களை சந்திக்க ராகுல் காந்தி பெங்களூரு வருகை

எச்.ஏ.எல் நிறுவன ஊழியர்களை சந்திக்க ராகுல் காந்தி பெங்களூரு வருகை தந்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அனலை கிளப்பி வரும் நிலையில், இந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இன்று ராகுல் காந்தி, அந்நிறுவனத்தின் ஊழியர்களை சந்திக்க உள்ளார்.

இந்துஸ்தான் ஏரோநெட்டிகல் நிறுவன வளாகத்திற்கு வெளியே ஊழியர்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். பொதுத்துறை நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை சந்தித்து ராகுல் காந்தி பேச திட்டமிட்டுள்ளார். இதற்காக ராகுல் காந்தி பெங்களூரு வருகை தந்துள்ளார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சை ஏன்?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விமானம் ஒவ்வொன்றும் ரூ.526 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, முதல் கட்டமாக பறக்கும் நிலையில் உள்ள 36 ரஃபேல் போர் விமானங்களை ஒவ்வொன்றும் ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், இந்த ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கு 12 நாட்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் தரப்பட்டு ஊழல் நடந்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் அரசில் இந்த ஒப்பந்தம், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்ததை பாஜக அரசு ரத்து செய்துவிட்டது என்று குற்றம் சாட்டியது. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலாண்டேவும், மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறுஎந்த நிறுவனத்தையும் தேர்வு செய்ய அதிகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இதற்கு பாஜக அரசு மறுப்பு தெரிவித்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்