Image Courtesy : PTI  
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா : வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தொடர்ந்து 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலை நேற்று முன்தினம் மாறி, 16 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு குறைந்தது. ஒரு நாளில் 15 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று 32.3% அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 557 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம் மற்றும் ஒன்பது மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுவதற்கான உயர்மட்டக் மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் தொற்று பாதிப்பால் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் சமூகத்துடன் ஒன்றியிணையாமல் இருப்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோயை சரியான நேரத்தில் கண்டறிய ரேபிட் ஆன்டிஜென் சோதனை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு