தேசிய செய்திகள்

வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா சந்திப்பு

வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களை அமித்ஷா சந்திக்க உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் பா.ஜனதாவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது.

எனவே இதற்காக கட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்கிறார். அப்போது அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தேர்தல்கள் முடிந்ததும் கட்சித்தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெறும் என தெரிகிறது. பா.ஜனதாவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் மத்திய மந்திரியாக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்