ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்த மாத தொடக்கத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து காணப்பட்டது. காஷ்மீரில் வசித்து வரும் பீகார் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன.
இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் அங்கு முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த பரபரப்பான சூழலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீருக்கு 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தபின் அமித்ஷா மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமித்ஷா, ஜம்மு ஐ.ஐ.டி.யில் புதிய வளாகம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். அதன்பின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏல்.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.