File Photo, Credit:ANI 
தேசிய செய்திகள்

மே.வங்காளத்தை நெருங்குகிறது ’அம்பன் புயல்’ : மம்தா பானர்ஜியுடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு

அம்பன் புயல் கரையக் கடக்கும் போது மணிக்கு 180-கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. இந்த புயலுக்கு அம்பன் என பெயரிடப்பட்டுள்ளது.

அம்பன் சூப்பர் புயல் நாளை மேற்கு வங்கம் -வங்காளதேசம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

அம்பன் புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் அதிக சேதம் ஏற்பட வாய்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நிலமையை சமாளிக்க பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு