போர்ட் பிளேயர்,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மூன்று நாள் பயணமாக இன்று செல்கிறார். அங்கு அவர் பல்வேறு வகையான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வார். அங்குள்ள சிறைச்சாலைக்கு சென்று தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவிப்பார். பயணத்தின் ஒரு பகுதியாக அவர் ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
மேலும் அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுக்குச் செல்ல இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கலந்து கொள்ள உள்ளார்.