தேசிய செய்திகள்

மிசோரம் முதல்-மந்திரிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து

உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

மிசோரம் முதல்-மந்திரி லால்டுஹோமாவுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், மிசோரம் முதல்-மந்திரி லால்டுஹோமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மிசோரம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜனவரி 29-ந்தேதி தன்னுடைய அலுவலகத்தில், மிசோரம் குழு தலைமையகத்திற்கான தேசிய மாணவர் படை அமைப்பை முதல்-மந்திரி லால்டுஹோமா தொடங்கி வைத்து பேசினார்.

அதற்கு முன்பு வரை அசாமிலேயே மிசோரம் தேசிய மாணவர் படை செயல்பட்டு வந்தது. இனி தனக்கான சொந்த தலைமையகம் ஒன்றை மிசோரம் தேசிய மாணவர் படை கொண்டு செயல்படும்.