தேசிய செய்திகள்

கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புடைய மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம் - அமித்ஷா உறுதி

கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புடைய மக்கள் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவோம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மத்திய மந்திரிசபை மாற்றத்தின்போது, புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த கூட்டுறவு அமைச்சகம் தனியாக உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சஹாகர் பாரதி கூட்டுறவு அமைப்பின் தேசிய தலைவர் ரமேஷ் வைத்யா தலைமையிலான குழு, அமித்ஷாவை சந்தித்தது. அக்குழுவிடம், பிரதமர் மோடி வழிகாட்டுதலில், கூட்டுறவு அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் அளித்து, அவற்றுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்க உறுதி பூண்டிருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.