தேசிய செய்திகள்

முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை

கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை மேற்கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் தங்கினார். பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பா.ஜனதா முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா சுமார் 2 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் நீட்டிக்க அனுமதிப்பது குறித்தும், ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை தடுப்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து இந்த கூட்டம் நடைபெற்றது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு