தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த 8 வார முழு ஊரடங்கு அவசியம்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 8 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தி எந்தவித தளர்வும் அறிவிக்க கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தலைவர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

கொரோனா அலை

இந்தியாவில் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிலர் படுக்கை இல்லாமல் அவதி அடைந்து வருகிற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடந்து நீடித்து வருகிறது. .

இந்தியாவில். நோய் பரவலை கட்டுப்படுத்த, தமிழகம், கேரளா, கர்நாடகா, டில்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கூறியதாவது:

ரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில், பெரும்பாலான மாவட்டங்களில், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. இந்த சதவீதம் 10-க்கும் கீழே குறையும் போது, ஊரடங்கில் தளர்வை அறிவிக்கலாம். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில், குறைந்தபட்சம் 8 வாரங்களுக்கு ஊரடங்கில் எந்தவித தளர்வும் அறிவிக்க கூடாது..

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு