லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. மாலை 4.27- மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.