தேசிய செய்திகள்

மலை மாதேஸ்வரா கோவிலில் லட்டு பிரசாதத்துடன் பக்தருக்கு ரூ.2.19 லட்சத்தை தவறுதலாக வழங்கிய ஊழியர்

மலை மாதேஸ்வரா கோவிலில் லட்டு பிரசாதத்துடன் பக்தருக்கு ரூ.2.19 லட்சத்தை ஊழியர் தவறுதலாக வழங்கினார்.

தினத்தந்தி

சாம்ராஜ்நகர்:

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் மாதேஸ்வரன் மலையில் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா சாமி கோவில் உள்ளது. ஆடி அமாவாசையான நேற்று முன்தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது ஒரு பக்தர் டிக்கெட் கவுண்ட்டரில் லட்டு பிரசாதம் வாங்கியுள்ளார். அங்கிருந்த ஊழியர் லட்டு பாக்கெட்டுடன், ரூ.2.19 லட்சம் பணம் இருந்த பையையும் தவறுதலாக எடுத்துக்கொடுத்துவிட்டார்.

ஆனால் அந்த பக்தர் யார் என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதனால் ரூ.2.19 லட்சம் பணத்துடன் அந்த பக்தர் எங்கோ சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மாதேஸ்வரன் மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் ரூ.2 லட்சத்துடன் சென்ற பக்தரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு