Image Courtacy: AFP 
தேசிய செய்திகள்

உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி தீ விபத்து: சிறுவன் பலி

உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியானான். மேலும் 162 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாஷ்கண்ட்,

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது விமான நிலையம் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் மின்னல் தாக்கியது. இதில் தொழிற்சாலையின் வெடிமருந்து கிடங்கு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். படுகாயம் ஏற்பட்ட 162 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு