தேசிய செய்திகள்

உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ; ஆளுநர் என்னை நிர்ப்பந்திக்கிறார்- குமாரசாமி

குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் என்னை நிர்ப்பந்தித்துள்ளார் என கர்நாடாக முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு

கர்நாடக சட்டசபையில் பேசிய முதல்வர் குமாரசாமி கூறியதாவது:-

குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் என்னை நிர்ப்பந்தித்துள்ளார். ஆளுநர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் ஆளுநரின் இரண்டாவது காதல் கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது. குதிரை பேரம் பற்றி 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்குத் தெரியுமா?

(எடியூரப்பா சுயேட்சை எம்.எல்.ஏ எச்.நாகேஷுடன் விமானத்தில் ஏறியதாகக் கூறப்பட்ட புகைப்படங்களை காட்டினார்). ஆனால், பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக நாங்கள் புகாரளித்த போது ஆளுநருக்கு தெரியவில்லையா?. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்