தேசிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம்: அம்பானி குழுமத்தின் வனவிலங்குகள் காப்பகம் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்திற்குள் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் ‘வந்தாரா’ காப்பகம் அமைந்துள்ளது.

தினத்தந்தி

ஜாம்நகர்:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தொழிலதிபர் ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு காப்பகமான 'வந்தாரா', முக்கிய பிரபலங்களின் விழிப்புணர்வு உரையுடன் கூடிய புதிய பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளது. #ImAVantarian என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிடப்பட்ட இந்த பிரசாரம், விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கூட்டு நடவடிக்கைக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

அஜய் தேவ்கன், பூமி பட்னேகர், ஜான்வி கபூர், வருண் ஷர்மா, கே.எல். ராகுல் மற்றும் குஷா கபிலா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான தங்கள் அர்ப்பணிப்பை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 2 நாட்களில் மட்டும் 1.75 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்திற்குள் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் 'வந்தாரா' காப்பகம் அமைந்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இதனை நிறுவி உள்ளது. வனவிலங்கு விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வில் கவனம் செலுத்தும் இந்த சரணாலயம், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் ஆனந்த் அம்பானியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை