தேசிய செய்திகள்

அந்தமான் நிகோபாரில் 3 பேருக்கு கொரோனா தொற்று

அந்தமான் நிகோபார் தீவுகளில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

போர்ட் பிளேர்,

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,570- ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரில் இரண்டுபேருக்கு விமான நிலைய பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டது.

அந்தமானுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் ஆகும். அந்தமான் நிகோபாரில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிகோபாரில் தொற்று பாதிப்பு தற்போது இல்லை. தெற்கு அந்தமானில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு