தேசிய செய்திகள்

ஆந்திரா காங்கிரஸ் பொறுப்பாளர்: உம்மன்சாண்டி நியமனம்

ஆந்திரா காங்கிரஸ் பொறுப்பாளராக திக்விஜய் சிங்கிற்கு பதிலாக உம்மன்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். #OommenChandy

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியை நியமனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி தலைமையில் கட்சியின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முழு பொறுப்பாளராகவும், பொதுசெயலாளராகவும் உம்மன்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த பொறுப்பில் திக்விஜயசிங் இருந்தார்.

இதே போல் மேற்கு வங்க பொறுப்பில் இருந்த ஜி.பி., ஜோஷி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளராக கவுரவ் கோகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை