தேசிய செய்திகள்

ஆந்திரா: பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் நடந்த 2-வது பெரிய என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும்.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தில் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் மரேதுமிலி வன பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்பு பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் படையினரும் பதிலடி தாக்குதலை தொடுத்தனர்.

இந்த மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு அமித் பர்தார் கூறும்போது, பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.

துப்பாக்கி சூட்டின்போது போலீசார் யாரும் பாதிக்கப்படவில்லை. கூடுதல் படைகளை நாங்கள் களமிறக்கி இருக்கிறோம் என கூறினார்.

கடந்த 6 மாதங்களில் நடந்த 2-வது பெரிய என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும். இந்த ஆண்டின் மே 7-ந்தேதி ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் உள்ள ராமவரம் வன பகுதியில் நடந்த போலீசாருடனான மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு