திருப்பதி,
ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் ரேணிகுண்டா பகுதியில் ரவி சங்கர் என்ற டாக்டர் தரை தளத்தில் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் சிக்கி ரவி சங்கர், அவரது 12 வயது மகன் மற்றும் 7 வயது மகள் உயிரிழந்து உள்ளனர். ரவி சங்கரின் மனைவி மற்றும் தாயார் மீட்பு பணியில் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக்கட்ட விசாரணையின்படி, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது.