தேசிய செய்திகள்

ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு சந்திரபாபு நாயுடு வரவேற்பு

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பை நான் வரவேற்கிறேன் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியுமான சந்திர பாபு நாயுடு கூறியதாவது:- ரிசர்வ் வங்கி அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவு சிறப்பு மிக்கது. நான் சில ஆண்டுகளுக்கு முன்பே, டிஜிட்டல் கரன்சியை அமல்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் கோரி இருந்தேன்.

ரூ.1,000, ரூ.2,000 போன்ற பெரிய நோட்டுகளால் ஊழல் அதிகரிக்கும். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நன்கொடை வழங்குவதும் இந்த பெரிய நோட்டுகளால்தான். எனவே, இதனை ஒழிக்க வேண்டுமென குரல் கொடுத்திருந்தேன். தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டை ரிசர்வ் வங்கி ரத்து செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு