கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிதாக 3,175 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,175 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் அரசு மேற்கொண்ட ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் புதிதாக 3,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,02,923 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை 12,844 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 35,325 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,692 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 18,54,754 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்