தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மேலும் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் இன்று மேலும் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,66,586 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 63 பேர் உயிரிழந்தநிலையில், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,537 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இன்று 5,786 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து 88,672 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 76,377 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...