தேசிய செய்திகள்

கஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் சிக்கினார்

உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் சிக்கினார்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை எதிரே வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக உப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரங்கய்யா ரெட்டி (வயது 28) என்பதும், ஆந்திராவில் இருந்து உப்பள்ளிக்கு ரெயில் மூலம் வந்து இங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து அவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 12 கிலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்