தேசிய செய்திகள்

10-ந்தேதி ஆந்திரா வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

10-ந்தேதி ஆந்திரா வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.

இந்தநிலையில், சந்திரபாபு நாயுடு கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, 10-ந்தேதி ஆந்திரா வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடத்த வேண்டும். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் 11-ந்தேதி சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும், இதில் தேசிய கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு