தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் உடனான மோதலில் மாயமான 14 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு

சுக்மா பகுதியில் நேற்று நக்சலைட்டுகள் உடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ராய்பூர்,

சத்தீஸ்காரின் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்கள் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். பிஜாப்பூர் மாவட்டத்தின் தரம் காட்டுப்பகுதியில் நேற்று சிறப்பு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுக்மா மற்றும் பிஜாப்பூர் எ்லலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த காட்டுப்பகுதியில் அவர்கள் நக்சலைட்டு எதிர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சுக்மா - பிஜாபூ எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா. பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா. இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீராகள் 5 பே உயிரிழந்தனா. 30 -பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று என்கவுன்டரில் ஈடுபட்ட வீரர்களில் 15 பேரை காணவில்லை என முதல்கட்டமாக செய்தி வெளியாகி இருந்தது. உடனடியாக கூடுதல் படையினர் மாயமான வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மாயமான வீரர்கள் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்