தேசிய செய்திகள்

உண்ணா விரத போராட்டத்தை ஒத்திவைப்பதாக அன்னா ஹசாரே அறிவிப்பு

கடைகளில் ஒயின் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே ஒத்தி வைத்து உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி வழங்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடும் எதிர்ப்பு தரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவர் மாநில அரசுக்கு கடிதங்களை எழுதினார். இந்தநிலையில் அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால், நாளை (திங்கள்) முதல் கடைகளில் ஒயின் விற்பனையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில் அண்ணா ஹசாரேவின் சொந்த ஊரான அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது தனது உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அண்ணா ஹசாரே கிராம மக்களிடம் கூறினார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?