தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்று மேலும் 60,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் இன்று மேலும் 60,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களாக கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளையும், மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் கொரோனாவின் பரவல் வேகத்துக்கு அரசுகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 60,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 60,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 67 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் 7 லட்சத்து 04 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 66,550 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 24 லட்சத்து 04 ஆயிரத்து 585 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 848 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58,390 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் நேற்று 9,25,383 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனுடன் 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 520 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு புதிய சாதனையை எட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 75.27 சதவிதம் பேர் குணமாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு