பிதோராகார்ஹ்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தின் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிதோராகாஹிலுள்ள பெரினாக் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த தீயானது மளமளவென பரவியதால் காடு முழுவதும் நெருப்பு அனலாய் காட்சியளிக்கிறது. இத்தீயினால் காடுகளிலுள்ள அரிய வகை மூலிகைகள் எரிந்து போயின. மேலும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை துரித நிலையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 295 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளதாக அம்மாநில செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.