தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ல் தேசிய அளவில் கருப்பு தினம் அனுசரிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி தேசிய அளவில் கருப்பு தினம் அனுசரிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நவம்பர் 8ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லி மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் அறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தி.மு.க. சார்பில் கனிமொழி மற்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சரத் யாதவ் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில், ரூபாய் நோட்டு தடையின் தீமைகளை விளக்கும்வகையில், நவம்பர் 8ந்தேதி, நாடுதழுவிய அளவில் கூட்டாக போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து 18 எதிர்க்கட்சிகளிடம் குலாம்நபி ஆசாத் கருத்து கேட்டபிறகு, மீண்டும் கூடிப்பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை அனுசரிக்கும் வகையில் தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி தேசிய அளவில் கருப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு