புதுடெல்லி,
கடந்த சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் கட்சித் தொண்டாகள் இடையே பேசிய மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா மெகபூபா முப்தி, கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.
அதே நிலை ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஏற்பட வேண்டாம் என பேசியிருந்தார். மெகபூபா முப்தியின் இந்த கருத்து கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உடனடியாக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில், மெகபூபா முப்தியை கடுமையாக சாடியுள்ள மத்திய மந்திரி அனுராக் தாகூர், ''இந்தியாவுக்கு எதிரான அபத்தமான கருத்துகளை மெகபூபா முப்தி கூறியுள்ளா.ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் வளாச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்றார்.