தேசிய செய்திகள்

உள்கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் பேசக்கூடாது- கபில் சிபலுக்கு சல்மான் குர்ஷித் கண்டிப்பு

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளருமான சல்மான் குர்ஷித், கபில் சிபல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார்.

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, கட்சி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்தார். காங்கிரசை மாற்று சக்தியாக மக்கள் பார்க்கவில்லை என்றும், கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலம் முடிந்து விட்டது என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளருமான சல்மான் குர்ஷித், கபில் சிபல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து நேற்று பேட்டி அளித்தார். சல்மான் குர்ஷித் கூறியதாவது:-

கட்சியில் கருத்துகளை தெரிவிக்க பல தளங்கள் உள்ளன. அங்கு சொல்வதை விட்டு விட்டு, பொதுவெளியில் பிரச்சினைகளை பேசக்கூடாது. அப்படி பேசுவது, கட்சியை காயப்படுத்துகிறது. எனது கருத்தை சொல்ல தலைமை வாய்ப்பு கொடுத்தது. அதுபோல், அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதில், தலைமை கேட்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியின் தேர்தல் கமிட்டி, கட்சி தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா காரணமாக, சிறிது தாமதமாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்